கலம் மென்ரேயினால் தயாரிக்கப்பட்ட நோ பயர் சோன் ஆவணப்படம் ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா தொடர்பாக பிரிட்டனின் கலம் மென்ரேயினால் தயாரிக்கப்பட்ட நோ பயர் சோன் (No Fire Zone) என்ற ஆவணப்படம்new-Gif லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகராலயத்திடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளது.

உண்மைகள் வெளிவருகின்றன. எனினும் இந்தச் செயற்பாட்டை தடுக்காமல் இதனை ஊக்குவியுங்கள் என நோ பயர் சோன் ஆவணப்படத்தின் சிங்களப் பிரதியை கையளித்துவிட்டு கருத்து தெரிவித்த கலம் மென்ரே கூறியுள்ளார்.

நோ பயர் சோன் ஆவணப்படத்தின் சிங்களப் பிரதியை லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்போது அவர் குறித்த பிரதியுடன் இலங்கை ஜனாதிபதிக்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

https://vimeo.com/126267346 என்ற இணையதளத்தில் பிரவேசிப்பதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நோ பயர் சோன் ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று கலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை லண்டனுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பீ.பீ.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்பேது தாம் குறித்த ஆவணப்படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.may-18-123

இந்த நிலையில் நோ பயர் சோன் ஆவணப்படத்தின் சிங்களப் பிரதிக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்காவிலுள்ள சிங்கள சிவில் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

ஸ்ரீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றை எடுத்துக்காட்டும் ஆதாரங்களை இந்த நோ பயர் சோன் ஆவணப்படம் கொண்டிருக்கின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குறிப்பாக ஷெல் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் என்பதனை எடுத்துக்காட்டும் காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் காணப்படுகின்றன.

kolam mecro kolam mecro 02600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*