2013ம் ஆண்டில் நாடு கடத்தப்பட்ட குறித்த இலங்கையர் மீளவும் சுவிட்சர்லாந்தில் தங்குவதற்கு அனுமதி

நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்new-Gif ஒருவரை மீளவும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

2013ம் ஆண்டில் நாடு கடத்தப்பட்ட குறித்த இலங்கையர் மீளவும் சுவிட்சர்லாந்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்ட குறித்த இலங்கையரை இலங்கைப் படைத்தரப்பினர் கைது செய்திருந்தனர்.

புகலிடம் வழங்குமாறு கோரி விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்.

நாடு திரும்புவதனால் அவருக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது எனக் கூறியே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தார்.may-18-123

எவ்வாறெனினும் நாடு திரும்பிய உடனேயே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னதாக குறித்த நபர் தடுப்பு முகாமொன்றிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரிடம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 250 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*