நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

நேபாளத்தில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் மீண்டும்new-Gif நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று தாக்கிய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இன்றும் மிகவும் மோசமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா, வங்கதேசத்திலும் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதோடு, எவெரெஸ்ட் பிராந்தியத்தில் புதிதாக பனிச்சரிவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான விமானங்களும் காத்மண்டுவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.may-18--2

மேலும் அடுத்த சிலநாட்களுக்கு நேபாளத்தில் மோசமான காலநிலையும் தொடர் மழையும் நிலவும் என்பதால், அங்கே நடக்கும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

நேபாளத்தில் நேற்று 25 க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.5600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*