19ஆவது திருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்:ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்

அரசமைப்பின் 19 ஆவது திருத்தம்  மற்றும் தேர்தல் முறைமை மாற்றம்  தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் new-Gifதற்போது எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும்  பிரதமர் தலைமையில் 19.04 அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கட்சித்தலைவர்களிடையிலான கூட்டத்தில் 19ஆவது திருத்தம் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதியும் 22ஆம் திகதியும் நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.
.
may-18--2
இருப்பினும் அதற்கு முன்னதாக நாளை மறுதினம் 21ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் 20ஆம், 21ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த அரசு எண்ணியிருந்தபோதும் இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய 21ஆம் 22ஆம்திகதிகளில் விவாதிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
கடந்த சில வாரகாலமாக 19ஆவது திருத்தம் தொடர்பில் நிலவிவந்த முட்டுக்கட்டை நிலை நீங்கியுள்ளதையடுத்து ஜனாதிபதியின் சில அதிகாரங்களைக் குறைத்து கட்டுப்பாடுகளை விதித்தல் , சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் , தகவல் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் ஆகிய ஜனநாயக ஆதரவு அம்சங்களை உள்ளடக்கிய 19ஆவது திருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*