144 கோடியை எட்டியுள்ள ‘பேஸ்புக்’ கணக்கு….

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக திகழ்கிறது. இந்த வலைத்தளத்தை  உலகமெங்கும் 144 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் சாப்பிட மறந்தாலும் மறப்பார்களே தவிர, ‘பேஸ்புக்’ வலைத்தளத்திற்கு செல்வதற்கு தவறுவதே இல்லை.தற்போது பேஸ் புக்கின் கால் ஆண்டில் அதன் லாபம் 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மொபைல் விளம்பரம் மூலம் இந்த வருவாய் கிடைத்து உள்ளது. விளம்பரம் மூலம் 3.32 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்து உள்ளது, கடந்த ஆண்டைnew-Gif விட பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13 அதவீதம் அதிகரித்து உள்ளது.  உலகம் முழுவதும் 144 கோடி பேர் பேஸ் புக்கை பயன்படுத்துகின்றனர். மொபைல் மூலம் 125 கோடிபேர்  பயனபடுத்துகின்றனர்.

இது குறித்து பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி  மார்க் சுகசர்பெர்க் கூறும் போது இந்த ஆண்டில் வலுவான தொடக்கத்தைடுத்து உள்ளது. நாங்கள் தொடர்ந்து எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதிலும் உலகை இணைப்பதிலும் கவனம் செலுத்துவோம் என்று கூறினார்.

பேஸ்புக்  ஹலோ என்ற ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன் பயன்பாட்டை வெளியிட்டு உள்ளது. இந்த அப்ளிகேஷன் யார் அழைக்கிறார்கள் என்பதை பேஸ்புக் மூலம் தேடி தெரிந்து கொள்ளலாம்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*