ஜேர்மனின் கோலோன்(Colongue) நகர தேவாலயத்தில் விங்ஸ் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை

ஜேர்மன் விங்ஸ் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தேவாலயம் ஒன்றில் சிறப்பு new-Gifபிரார்த்தனை நடைபெற்றது.

கடந்த மாதம் 24ம் திகதி பிரான்சின் ஆல்பஸ் மலையில் விழுந்து நொறுங்கிய ஜேர்மன் விங்ஸ் விமானத்தில், அதில் பயணித்த 150 பேரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜேர்மனின் கோலோன்(Colongue) நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில் ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா ஏஞ்சலா மெர்கல்(Angela Merkel), ஸ்பெயின் உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்(George Bernards), பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், மீட்புபணியில் ஈடுபட்டவர்கள், லூப்தான்சா மற்றும் ஜேர்மன் விங்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 1,400 பேர் கலந்து கொண்டனர்.Untitled-2

பலியான பயணிகளை நினைவுக்கூறும் வகையில், 150 மெழுகுவர்த்திகள் தேவாலயத்துக்குள் எரியவைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி ஆண்டிரியாஸ் லுபிட்ஸ்காகவும் மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி ஜேர்மனி முழுவதும் அந்நாட்டு கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

germanwings_memorial_002 germanwings_memorial_003 germanwings_memorial_005 germanwings_memorial_006 germanwings_memorial_007 germanwings_memorial_009

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*