இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக சகல மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்:ஐ. நா உயர் மட்ட அதிகாரி

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக சகல மக்களும் new-Gifபாதுகாக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை குறித்து அரசாங்கம் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

எனினும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் காரணமாக பாதிப்படைந்தவர்களுக்கான உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லோ டி கிரிவ் இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இவர் மத்திய மற்றும் மாகாண மட்டத்தில் உள்ள பல உயர் அரசாங்க அதிகாரிகள், நீதி துறையினர், பொது அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.Untitled-2
இவர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல நகரங்களுக்கு விஜயம் செய்திருந்தார்.
இவரினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கையில், கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் வன்முறைகள் குறித்து ஆராய பல ஆணைக்குழுக்களையும் பல விசாரணை குழுக்களையும நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட அமைப்புகள் உபயோகமான அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ள போதிலும், பாதிப்படைந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்; வகையில் அது அமைவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கு இடையேயான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு குறுக்கு வழிகளை உபயோகிக்க கூடாது எனவும் அவர் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*