சமூக வலைத்தளமான ஃபேஸ் புக் மீது பயனாளர்கள் தொடுத்த வழக்கு

சமூக வலைத்தளமான ஃபேஸ் புக்கை பயன்படுத்தும் 25000 பேர் கூட்டாக முன்னெடுத்துள்ள new-Gifவழக்கின் முதல் விசாரணை இன்று வியாழனன்று வியன்னாவில் நடக்கிறது.

ஃபேஸ் புக் சமூக வலைத்தள நிறுவனம் தனது சேவையை பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அடுத்தவர்களுக்கு அனுப்பும் செயல் ஐரோப்பாவின் தனிமனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சுமத்தி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஆஸ்திரிய செயற்பாட்டாளரான மேக்ஸ் ஷ்ரெம்ஸ் முன்னெடுத்துள்ளார். அமெரிக்க கண்காணிப்பு நிறுவனமான பிரிஸமுடன் இணைந்து ஃபேஸ்புக் இந்த தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டது என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.Untitled-2

இந்த வழக்கு பெர்லினில் அமைந்துள்ள ஃபேஸ்புக்கின் ஐரோப்பிய தலைமையகத்துக்கு எதிராக தொடுக்கபட்டுள்ளது.

இந்த்த் தலைமையகம் தான் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ளவர்களின் ஃபேஸ்புக் கணக்குகளை பதிந்து கொள்கிறது.

இந்த சட்ட நடவடிக்கை குறித்து ஃபேஸ்புக்நிறுவனம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*