தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கத் தயாா் இல்லை:சுரேஸ் பிரேமசந்திரன்

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் new-Gifதேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தெற்கின் பேரினவாத கட்சிகள் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தமிழர் ஒருவருக்கு வழங்குவதனை விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தர்க்க ரீதியான அடிப்படையில் நோக்கினால் இலங்கை நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமுடையவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Untitled-2
எனினும்இ வாசுதேவ நாணயக்கார போன்ற தெற்கு அரசியல்வாதிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து இனவாத அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இனவாத அடிப்படையிலான அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த தீர்மானங்களை எடுக்க சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*