பிரான்ஸில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மசூதிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும்

பிரான்ஸில் இருக்கும் மசூதிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்new-Gif இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் முஸ்லீம் மதத்தலைவர் ஒருவர் கோரியுள்ளார்.

பிரான்ஸின் இஸ்லாமிய சமூகத்தின் தேவைகளுக்கு பிரான்ஸில் தற்போது இருக்கும் 2200 மசூதிகள் போதுமானவையாக இல்லை என்று பிரென்சு முஸ்லீம் கவுன்சிலின் தலைவரும் பாரிஸ் மசூதித் தலைவருமான டாலில் பொவ்பக்கர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அமைப்புக்களின் பிரெஞ்சு கூட்டமைப்பின் ஆண்டுவிழாவில் பேசும்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

பிரான்ஸில் தற்போது 50 முதல் 60 லட்சம் முஸ்லீம்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஐரோப்பாவில் வேறு எந்த நாட்டைவிடவும் பிரான்ஸிலேயே முஸ்லீம்கள் பெருமளவு வாழ்கிறார்கள்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*