ஓடும் பேருந்தில் இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம்

ஓடும் பேருந்தில் இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் new-Gifஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட அரசு பேருந்தில், சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், 25 வயது மதிக்கத்தக்க வாலிபரும், ஒருவரையொருவர் தொட்டு பேசி விளையாடுவதும், மாறி மாறி முத்தமிட்டு கொண்டு விளையாடியுள்ளனர்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் இளம்ஜோடிகளின் செயலை கண்டித்தனர். இதையடுத்து சிறிது நேரம் சாதாரணமாக இருந்தவர்கள் மீண்டும் தங்கள் லீலையை அரங்கேற்றினர்.

உடனே நடத்துனர், அந்த வாலிபரை இடம் மாறி அமரும்படி கூறியுள்ளார். முதலில் மறுத்த அவரை, ஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்கும்படி கண்டிப்புடன் கூறியுள்ளார், இதற்கு ஆதரவாக பயணிகளும் சப்தம் போடவே வாலிபர் வேறு இருக்கைக்கு மாறியுள்ளார்.

அதன்பின் பேருந்தில் இருவரும் இருபக்கமாக அமர்ந்து கொண்டு நெல்லை வரை கைப்பேசியில் பேசிக்கொண்டே சென்றுள்ளனர்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*