சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ-வுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக குவிந்துவருகின்றனர்.
கடந்த திங்களன்று உயிரிழந்த, 91 வயதான, லீ குவான் யூ -வின் உடல் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட முன்னாள் பிரதமரின் பிரேதப்பெட்டி, 31 ஆண்டுகளாக அவரது அலுவலகமாக இயங்கிவந்த இஸ்தானா மாளிகையிலிருந்து நாடாளுமன்றத்துக்கு பீரங்கி வண்டியில் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது.
வீதிகளில் வரிசையாக கூடி நின்ற பெருமளவிலான மக்கள் தங்கள் நாட்டின் நிறுவனரின் பெயரைக் கோஷமாக எழுப்பினர்.
வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில், லீ குவான் யூ-வின் உடல் நான்கு நாட்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.