ஒத்திவைக்கப்பட்டது ஐ.நாவின் அறிக்கையே அன்றி தமிழர்களின் செயற்பாடுகள் அல்ல : மனித உரிமைச்சபையில் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் !

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை ஒத்திவைக்கபட்டாலும்new-Gif தமிழர்களுக்காகன பரிகாரநீதிக்கா செயற்பாட்டில் தமிழர் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீவிரமாகவுள்ளனர்.
தமிழீழத் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் உட்பட புலம் தேசங்களை மையமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ,பிரத்தானிய தமிழர் பேரவை ,தமிழர் மனித உரிமைகள் மையம் – பிரான்சு மற்றும் பல தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் இச்செயற்பாட்டில் உள்ளனர்.
பிரென்சு மொழிபேசுகின்ற  ஆபிரிக்க நாடுகளை மையப்படுத்தி பிரான்சு தலைமையகமாக கொண்டு 23 நாடுகளில் இயங்குகின்ற CNRJ அமைப்பின் தலைவர் Federic Paprpani அவர்கள்,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான வளஅறிஞர் குழுவில் இணைந்து பங்கெடுத்துள்ளார்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையப்படுத்திய கையேடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரண் பார்கர் அம்மையார் அவர்கள் முதற்கையேட்டினைப் பெற்றுக் கொள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான ஒருங்கிணைப்பாளர் முருகையா சுகிந்தன் அவர்களஇ வெளியிட்டு வைத்தார்.
இதேவேளை தமிழர்களுக்கான நீதியினை வலியுறுத்தி தமிழர் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்திருந்த உப மாநாட்டில், சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றத்திடம் நிறுத்துமாறு கோரும் கையெழுத்துப் போராட்ட மனு, நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி சுதன்ராஜ் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

TGTE2015 TGTE2015-1 TGTE-1 TGTE-3600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*