தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை கைது செய்ய வேண்டும்:அரசு சட்டக்கல்லூரி மாணவி

தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை கைது செய்ய வேண்டுமென மதுரை  அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தனுடன் வந்து தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.new-Gif

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ”இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு வசதி செய்யும் உட்கருத்துடன் அல்லது அதனால் அனேகமாக அவருக்கு காயம் விளைவிக்கக்கூடும் என்று அறிந்து, நஞ்சு எதையும் அல்லது மதிமயக்கம் செய்கிற போதை தருகிற அல்லது நலத்தை கெடுக்கிற மருந்துச்சரக்கு அல்லது வேறு பொருள் எதையும் எவர் ஒருவருக்கும் கொடுப்பவர் அல்லது  உட்கொள்ளும்படி செய்பவர் எவராயினும் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். அவரை அபாரதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்  என்கிறது. அதோடு ஐ.பி.சி 319-ன் படி ஒருவருக்கு உடல்வலி, நோய் அல்லது வலிமைகேடு விளைவிக்கிற எவரும் காயம் விளைவிக்கிறார் என்று  சொல்லப்படுகிறார் .

ஆனால், தமிழக அரசோ டாஸ்மாக் மதுகடைகளை திறந்து இத்தகைய குற்றங்களை பகிரங்கமாக செய்கிறது. இதனை கண்டித்து டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்கும் குற்றத்தை நிறுத்துமாறு கடந்த 01.03.2013 அன்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பினேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் உடனடியாக மூடவேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது என மதுவிலக்கு துறை எனக்கு பதில் அனுப்பியது. இதன்மூலமாக மக்களின் உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது அரசின் கொள்கை என்பதை தமிழக அரசு உறுதிபடுத்தியுள்ளது. கொள்கை முடிவு என்று சொல்லி மக்களின் உயிர்வாழும் உரிமையை தமிழக அரசு பறித்து வருகிறது. இது அரசியல் சாசனத்தின் 21-வது ஷரத்தின்படி  மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை பறிப்பதாக உள்ளது .

அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல் முதல்வராக இருக்கும் பெரியகுளம், தெற்கு அக்ரஹாரத்தில் வசிக்கும்  ஓ.பன்னீர் செல்வத்தை இந்திய தண்டனை சட்டம் 328 கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் நந்தினி கூறுகையில், ”நாளை திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சென்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதனையும் கைது செய்ய வென்டுமெனவும், அதற்கு அடுத்த நாள் டி.ஜி.பி அசோக் குமாரை சந்தித்து முன்னாள் முதல்வர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரையும் கைது செய்யுமாறு புகார் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*