காணாமல்போனவர்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வருகின்ற உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை

இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் நடத்தப்பட்டுnew-Gif வருகின்ற உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தும், சர்வதேச தரத்திலான விசாரணையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.

வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுமாக 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மாவட்ட அரச செயலகங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நலன்புரி அமைப்புக்களும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

காணாமல்போயுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் சர்வதேசத்தின் அர்ப்பணிப்புடனான ஈடுபாடு அவசியம் என்று வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இந்த 8 மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட காணாமல்போனோரின் குடும்பங்களும் உறவினர்களும் வவுனியா மன்னார் வீதியில் உள்ள பிரதேச செயலகத்திற்கு எதிரில் இருந்து பேரணியாக அரச செயலக வாயில் வரை சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.

 

kajan

S1650029

S1650037

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*