இந்தியப் பிரதமர் யாழ்.வருகை தரவுள்ள நிலையில் யாழில் மாபெரும் ஊர்வலத்துடன் கூடிய மௌனப் போராட்டம்

தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை new-Gifஅரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். என்று வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் வருகை தரும் சமயம் யாழில் மாபெரும் ஊர்வலத்துடன் கூடிய மௌனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.பிரதான பேருந்து நிலையத்தில் குறித்த போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் யாழ்.வருகை தரவுள்ள நிலையில் குறித்த போராட்டம் நடாத்தப்படுகின்றது.jenivaa

போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் பூர்வீகமாக குடியிருந்த பிரதேசத்தில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பூரணமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தல், மீள்குடியேற்ற மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை எட்டரை இலட்சமாக வழங்குதல், இந்திய – இலங்கை மீனவர்களது பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல், வளங்களை அழிக்கும் தொழில் முறையைத் தடை செய்தல், இழுவைப்படகால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், சரணடைந்தவர்களை மீள ஒப்படைத்தல், காணாமற்போனவர்கள் தொடர்பில் தகுந்த பதில் வழங்குதல்,போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*