தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது,

ஒரு நாள் ISIS தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழிnew-Gif மறைத்தனர். 
ISIS தீவிரவாதி – நீ எந்த மதம்? 
அந்த மனிதர் – நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டின்) 
ISIS தீவிரவாதி -. அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்களாம் 
(காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டாள்) 
ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார். 
ISIS தீவிரவாதி – சரியாக கூறினாய் நீ செல்லலாம். 
கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி “எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், 
ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது? “ 
அவர் – அவர்களுக்கு குரான் தெரியாது. 
மனைவி – அது எப்படி உங்களுக்கு தெரியும். 
அவர் சிரித்துக்கொண்டே “அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்” 
எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை. 
தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது.

யே.காந்தன் (முகநூல்)

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*