5 மாதங்களில் வழுக்கை தலையில் முடி வளர புதிய மருந்து.

தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடையnew-Gif செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண முடியவில்லை. அனால் தற்போது வழுக்கை தலையில் முடி வளரக்கூடிய வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தலையில் வழுக்கை விழுதல் ஒரு நோயாகும்.

மயிர் காம்புகள் அழிவதால் இந்த வழுக்கை உருவாகின்றன. எனவே இது குறித்து சுண்டெலிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மயிர்க்காம்புகளை அழிக்கும் ‘டி’செல்கள் கண்டறியப்பட்டன.

அந்த செல்களை அழித்து புதிய தலைமுடிகள் வளர செய்யும் வகையில் மருந்து கண்டு பிடித்துள்ளனர். அதற்கு ‘ஜாக்’ என பெயரிட்டுள்ளனர். இந்த மருந்தை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் போதும். அந்த இடத்தில் 5 மாதத்தில் மீண்டும் முடி வளருகிறது.

சோதனை முறையில் இது பலருக்கு முழுமையாக பலன் அளித்துள்ளது என ஆராய்ச்சி குழுவின் தலைவர் ரபேல் கிளைனெஸ் மற்றும் ஏஞ்சலா கிறிஸ்டியானோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*