உங்கள் போட்டோவை அழகாக இலவச மென்பொருள்!!

உங்கள் போட்டோவை அழகாக இலவச மென்பொருள் பல உள்ளன. அவற்றில்new-Gif அனைவரும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியது Photo Mix மென்பொருள்.

தற்காலத்தில் போட்டோ எடுப்பது என்பது ஒரு சர்வ சாதாரணமான காரியமாகிவிட்டது. கையில் ஒரு சிறிய Cellphone மட்டும் இருந்தால் மட்டும் போதும். இஷ்டத்திற்கு Photos எடுத்து தள்ளிவிடுகிறோம்.

foto mix free photo editing software

அதுபோன்று நீங்கள் உங்கள் வீட்டு விஷேசத்திற்கோ, அல்லது வேறு வெளியிடங்களுக்கு சுற்றுலாச் செல்லும்பொழுது நீங்கள் Click செய்த Photos உங்களிடம் நிறைய இருக்கும்.

அவற்றையெல்லாம் ஏனோ தானோவென்று எடுத்து வைத்திருப்பீர்கள். நேரம் கிடைக்கும்போது அவற்றை எடுத்துப் பார்க்கும்பொழுது ” அடடா.. இவ்வளவு நல்லா வந்திருக்கே.. இந்த போட்டோவை இன்னும் கொஞ்சம் Touch Up செய்தால் நல்லா இருக்குமே..” என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும்.

அவ்வாறான எண்ணங்கள் ஏற்பட்டாலும், போட்டோவை டச் செய்ய கொடுத்தால் அதிக பணம் செலவாகும் என்ற எண்ணம் வந்து, அதை அப்படியே விட்டிருப்பீர்கள்.

இனிமேல் அவ்வாறு நினைத்தவுடனேயே உங்களுடைய போட்டோங்களை நீங்களே டச் அப் செய்துகொள்ள முடியும்.

அதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவைதான் Photo Editing Softwares.

அதுபோன்றதொரு அருமையான மென்பொருள்தான் FotoMix என்ற போட்டோ எடிட்டிங் மென்பொருள். ஒரு சில கிளிக்குகள் செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் போட்டோக்களை இந்த மென்பொருள் மூலம் மெருகூட்டி அழகாக்கிக்கொள்ள முடியும்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய:  http://www.diphso.no/FotoMix.html என்ற இந்த வலைப்பக்க முகவரியைச் சொடுக்குங்கள்.

குறைந்த அளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளை தரவிறக்கம் செய்வதும், அதை நிறுவுவதும் (இன்ஸ்டால்) மிக எளிமையான வழி முறைகளே.. ஒரு சில கிளிக்குகளில் அனைத்தும் முடிந்துவிடும்.

போட்டோ மிக்ஸ் மென்பொருள் மூலம் என்னென்ன செய்யலாம்?

  • உங்கள் போட்டோகளின் பேக்ரவுண்ட் மாற்றிக்கொள்ள முடியும்.
  • அந்த போட்டோக்களை வேறொரு போட்டவை இணைக்க முடியும்.
  • ஏற்கனவே உள்ள ஒரு பகுதியை நீக்க முடியும்.பல்வேறு போட்டோக்களை இணைத்து அதை ஓவியம் போல மாற்றலாம். இவ்வாறு செய்யும் செயல்பாட்டை கொலாஜ் என்பார்கள்.
  • அது மட்டுமில்லீங்க.. வால்பேப்பர், சி.டி. கவர், டிவிடி கவர்.. இப்படி உங்களுக்கு விருப்பமான  கவர்களை நீங்களே டிசைன் பண்ணலாம்.
  • இந்த மென்பொருளின் முக்கிய அம்சமே.. நீங்கள் செய்த எல்லா போட்டோ வேலைப்பாடுகளும் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக, அழகாக காட்சியளிக்கும்.
போட்டோ வேலைப்பாடுகள் அனைத்தையும் முடித்துவிட்டு அதை பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.. இ-மெயில் செய்யலாம்.  விண்டோஸ் இயங்குககளில் இயங்க கூடியதால் அனைவருமே இதை பயன்படுத்துவது எளிது.
அருமையான இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்களேன்.. நீங்களும் ஒரு போட்டோஷாப் டிசைனர் ஆகலாம்..!!!

மென்பொருளை நேரடியாக தரவிறக்கம் மேற்கொள்ள இந்த இணைப்பில் சொடுக்கவும்.

நன்றி..

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*