அல்டிமேட் ஸ்டார் அஜித்-ஷாலினி ஜோடிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது

தமிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு இன்று காலைnew-Gif 4.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அமர்க்களம் படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து அமர்க்களமாக ஜோடி சேர்ந்தனர்.

கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி, தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை அனோஷ்கா பிறந்தாள். jenivaa
கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அஜித் குடும்பத்தினர், சினிமா உலகினர் மற்றும் ‘தல’ ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ‘தல’ ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நேரத்தில் அஜித் ரசிகர்களுடன் மாலை மலர்.காமும் தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கிறது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*