தனக்குத்தானே லவ்யூ சொல்லிக் கொண்ட சார்மி

காதலர் தினத்தை முன்னிட்டு தனக்குத் தானே காதல் கடிதம் ஒன்றை எழுதி, அதனை தனதுnew-Gif டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சார்மி. தமிழில் சிம்பு ஜோடியாக டி.ராஜேந்தர் இயக்கத்தில், ‘காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை சார்மி.

தொடர்ந்து தமிழில் சொல்லிக் கொள்கிறபடி படங்கள் அமையாததால் தெலுங்குப் படவுலகம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். அசப்பில் ஜோதிகாவை நினைவு படுத்தும் அவரது துள்ளலான நடிப்பால், அங்கு முன்னணி நடிகைகளுள் ஒருவரானார். சமீபத்தில் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், டைரக்டர் புரி ஜெகனாத் இருவருடனும் இணைத்து காதல் கிசுகிசுவில் சிக்கினார் சார்மி. ஆனால் இருவருமே இதை மறுத்தனர்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும்… ஆனால் உண்மையான ஒரு காதல் வார்த்தைகூட யாரும் எனக்கு சொல்லவில்லை. எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஏமாற்றத்தைத்தான் தரும். இனியும் எதற்காக காத்திருக்க வேண்டும். எனக்கு நானே காதலர் தின வாழ்த்து கூறிக்கொள்கிறேன். பரிசும் கூட வாங்கியிருக்கிறேன்:

jenivaa

ரோஜாப்பூக்கள்… எனக்காக சில ரோஜாப் பூக்கள் வாங்கினேன். ‘உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன். கடைசி வரை உன்னுடனே இருப்பேன்’ என அந்தக் காதல் கடிதத்தில் எழுதினேன்.
இது தான் உண்மை… என்னைவிட வேறுயார் என் மீது அன்பு செலுத்திவிடப்போகிறார்கள். இதுதான் உண்மை.

தனிமையிலே இனிமை… தனியாக பிறந்தோம் தனியாக இறப்போம். தனியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். உன்னை நீயே காதலிக்க கற்றுக்கொள்’ என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

காதல் தோல்வி… சமீபத்திய காதல் தோல்விதான் சார்மியை இப்படியெல்லாம் மெசேஜ் போட வைக்கிறது என டோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். சமீபத்தில் கூட அமெரிக்காவில் ஒரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார், தன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வராததால். கிட்டத்தட்ட அதே பாணியில் தனக்குத்தானே லவ்யூ சொல்லிக் கொண்டுள்ளார் சார்மி என்பது குறிப்பிடத்தக்கது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*