இனந்தெரியாத நபர்களினால் விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் கடத்தல்

யாழ்.விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் new-Gifசெல்லப்பட்டுள்ளார்.
சம்பவம்  குறித்து தெரியவருவதாவது,
யாழ். விக்டோரியா வீதியால் வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியை வானில் வந்தவர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர்.
பூநகரியை சேர்ந்த மேரி லாவண்யா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
பூநகரியில் வசிக்கும் இவர், சனி, ஞாயிறு தினங்களில் அரியாலையிலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று கல்விகற்று வருகின்றார்.
இவ்வாறு இன்றும் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றபோது, ஹயஸ் ரக வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும்  சில தினங்களுக்கு முன்னர் வானில் வந்த சிலர் தன்னை பின்தொடர்வதாக மாணவி  தனக்குக் கூறியதாக தாயார் தெரிவித்துள்ளார்.
jenivaa
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்தி

யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியுள்ள கலாச்சார சீரழிவு தொடர்பாக பல செய்திகள் நாளாந்தம் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) காலை யாழில் பட்டப் பகலில் நடந்த கடத்தல் சம்பவம் ஒன்று அனைவரையும் உலுக்கியுள்ளது. யாழ் பூனகரியைச் சேர்ந்த 19 வயதான லவனிதா என்னும் பெண், லண்டனில் உள்ள இளைஞர் ஒருவரோடு கதல்வயப்பட்டுள்ளார். பேஸ் புக் ஊடாகவே இந்தக் காதல் மலர்ந்துள்ளது என்கிறார் அவரது தோழன். பல மாதங்களாக காதல் லீலையில் இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். இதேவேளை லவனிதா யாழில் தங்கி படித்துவரும் நிலையில், டியூசன் கிளாசுக்கு வரும் வேறு ஒரு இளைஞரோடும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுவிட்டது.

இந்த முக்கோண காதலால் தான் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது என்பது தற்போது தெளிவாகியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் உள்ள விக்டோரியா வீதியில் உள்ள டியூசன் சென்ரன் ஒன்றில் லவனிதா கற்று வந்துள்ளார். நேற்றைய தினம்(15) அவர் டியூசனை முடித்துக்கொண்டு , குறித்த யாழ் காதலனோடு பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். விக்டோரியா வீதி மற்றும் மணிக்கூடுகோபுர வீதி இணையும் சந்தியில் மின்னல் வேகத்தில் வெள்ளை வான் ஒன்று வந்து அவர்களை மறித்துள்ளது. அதில் இருந்து இறங்கிய 3 நபர்கள் லவனிதாவின் யாழ் காதலனை அடித்து தள்ளிவிட்டு அவரை கடத்திச் சென்றுவிட்டார்கள்.

வெள்ளை வேனுக்குள் இருந்த நபரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும். அவரே லவனிதாவின் வெளிநாட்டு காதலன் என்று உள்ளூர் காதலன் தெரிவித்துள்ளார். குறித்த நபர் லண்டனில் இருந்து யாழ் சென்று இக்காரியத்தில் ஈடுபட்டாரா என்று பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். மேலும் லவனிதாவின் லாப்-டாப் , பேஸ் புக் சாட்டிங்கையும் அவர்கள் ஆராய்ந்து வருவதாக யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இப்போதெல்லாம்பெண்கள் காதலனை ஏமாற்றுவது என்பது சகஜமாகிப்போய்விட்டது. ஆனால் அதற்காக காதலியை கடத்தவேண்டும் என்ற நியதி இல்லையே. ஆனால் இந்த விடையத்தில் காதலன் சற்று அதிகமாகவே கோபம் அடைந்துவிட்டார் போல தெரிகிறது. வெளிநாட்டில் காதலனை வைத்துக்கொண்டு, அவன் அனுப்பும் பெரும் பணத்தை எடுத்து யாழில் செலவு செய்துகொண்டு, போதாக்குறைக்கு வேறு காதலன் ஒருவரையும் வைத்திருந்தால் எந்த ஆணுக்கு தான் கோபம் வராமல் இருக்கும் சொல்லுங்கள் ?

5
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*