தமிழ் தலைவர்களும் புலம்பெயர் அரசியற் சமூகமும் கூட்டாக வியூகங்களை வகுத்து வேண்டிய காலம் இது : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

சவால்மிகுந்த இக்காலத்தில் எமக்கான நீதியினை வென்றடைவதற்கு, தமிழீழத் தாயக new-Gifஅரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழ் அரசியற் சமூகமும் கூட்டாக வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டிய காலம் இதுவென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.
சிறிலங்கா ஆட்சிமாற்றம் – ஐ.நா மனித உரிமைச்சபை – தமிழினப்படுகொலைக்கு பரிகார நீதி ஆகிய விடயங்களை மையப்படுத்தி, சுவிஸ் சூரிச்சிலும், பிரித்தானியா லண்டனிலும் இடம்பெற்ற சமகால அரசியற் பொதுக்கூட்டத்தில் கருத்துரையினை வழங்கும் பொழுதே இக்கூற்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணையவழி காணொளிவாயிலாக கருத்துரையினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், 1983ம் கறுப்பு யூலை இனக்கலவரம் தொடர்பில் எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார் செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு, இன்றுவரை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
அதுபோன்றே மீண்டும் இன்று அனைத்துலக சமூகத்தினை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ் பெண்கள், தாய்மார்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வுகள் குறித்து இன்றுவரை விசாரணை நடத்தப்படவில்லை.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் 1995ம் ஆண்டு கோணேஸ்வரிக்கு நடந்த பாலியல் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எந்தவித விசாரணையும் இன்னுமில்லை.
அதே சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றுமொரு சம்பவமான சாரதம்பாளுக்கு நடந்த பாலியல் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எந்தவித விசாரணையும் இன்னுமில்லை
செம்மணிக்கு படுகொலைக்கும் இதுவரை எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.
இவற்றையெல்லாம் மூடிமறைத்துக் கொண்டு மீண்டும் உள்ளக விசாரணை குறித்து சிறிலங்கா பேசுவது, அனைத்துலக விசாரணையினை இல்லாதொழிக்கின்ற தந்திரோபாயங்களில் ஒன்றாகவே உள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இடித்துரைத்தார்.
சிங்களத்தின் அரச கட்டமைப்பின் மூடிமறைப்புக்களை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தியவாறு, அனைத்துலக விசாணை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என தெரிவித்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தாயக அரசியல் தலைவர்களும் புலம்பெயர் தமிழ் அரசியற் சமூகமும் கூட்டாக வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டிய காலம் இதுவெனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

 

நாதம் ஊடகசேவை
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*