இனிமேல் கவர்ச்சி காட்டமாட்டேன்:மல்லிகா ஷெராவத்

கவர்ச்சி காட்டி போர் அடித்துவிட்டது. இனிமேல் கவர்ச்சி காட்டமாட்டேன் new-Gifஎன்றார் மல்லிகா ஷெராவத்.தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்திருப்பதுடன் ஒஸ்தி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்.

டாப் லெஸ் காட்சிகளில் நடித்திருப்பதுடன், சமீபத்தில் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் ஓம்புரியுடன் படுக்கை அறை காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆடை குறைத்து கவர்ச்சியாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. கவர்ச்சி காட்டி காட்டி போரடித்துவிட்டது. தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளேன். நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடத்தை தேடி காத்திருக்கிறேன். குத்து பாடலுக்கு மட்டும் ஆடவிரும்பவில்லை.

எனது வேடம் மாறுபட்டதாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கவர்ச்சியாக நடிக்க கூறினால் நான் நடிக்க மாட்டேன். டர்ட்டி பாலிடிக்ஸ் படம் எனது திறமையை நிரூபிக்கும்.

பார்ட்டிகளில் கூட்டமாக கலந்துகொள்வது எனக்கு பிடிக்காது. அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. என் உழைப்பில் என்னை வளர்த்துக்கொள்ளவே எண்ணுகிறேன். இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*