1200 பேர் இந்தியர்கள் கணக்குகளில் ஹெச்.எஸ்.பி.சி. சுவிஸ் பிரிவில் 25,000 கோடி

ஹெச்.எஸ்.பி.சி. சுவிஸ் பிரிவில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்களில் கிட்டத்தட்டnew-Gif 1200 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் கணக்குகளில் மொத்தத்தில் 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை இருப்பதாக கசிந்த தகவல்களை ஆராய்ந்த இந்திய பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் என்பது இந்தியாவில் ஏற்கனவே பெரும் அரசியல் சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது.

கருப்பு பணத்தை மீட்போம் என்ற வாக்குறுதிகளை இவ்வாண்டில் முன்னதாக நடந்த தேர்தல் நாடாளுமன்ற பிரச்சாரத்தின்போது பாஜக தெரிவித்திருந்தது.

ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் கருப்பு பணத்தை மீட்பதற்கான விசேட செயலணி ஒன்றை அமைத்திருந்தது.

ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்கள் 627 பேரின் பெயர் பட்டியலை பாஜக அரசாங்கம் இந்திய உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க, விசாரணை செய்துவரும் விசேட புலனாய்வு அணிக்கு அந்தப் பட்டியல் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது பெயர் வெளியாகியுள்ள புதிய நபர்கள் குறித்தும் விசாரணை செய்யப்படும் என இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

அதே நேரம் ஹெச்.எஸ்.பி.சி.யில் கணக்கு வைத்திருந்தவர்கள் அனைவருமே வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் என்று அனுமானிப்பது தவறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*