சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விசாரணை செப்ரெம்பரில்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதானnew-Gif மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சிறிலங்காவின் புதிய அரசாங்கம், தமக்கு காலஅவகாசம் தருமாறு கோரியுள்ள நிலையில், விசாரணை அறிக்கை மீளாய்வை வரும் செப்ரெம்பர் மாதத்துக்குப் பிற்போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரதான நாடான அமெரிக்கா, அறிக்கை மீதான விவாதத்தை செப்ரெம்பர் மாத அமர்வில் நடத்துமாறு கோரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திடத்தை வரவேற்று தமது நாட்டு அரசாங்கங்களுக்கும் அறிக்கையை அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்களுக்கு மெருகேற்றும் பணியை வரும் 16ம் நாள் ஐ.நா நிபுணர் குழுவொன்று மேற்கொள்ளவுள்ளது.

இந்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், மீளாய்வு செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே ஜெனிவாவில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய அதிபரின் கரங்களை வலுப்படுத்தவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு காலஅவகாசத்தைக் கொடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஜெனிவா மீதிருந்த கவனத்தை அமெரிக்கா சிறிலங்கா மீது திருப்பியுள்ளதாக அண்மையில் சிறிலங்கா வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*