சிம்பாபே சர்வாதிகாரி றொபேட் முகாபே தடக்கி விழுந்தாா்:வெளியாகிய புகைப்படங்களால் கடுப்பாகிவிட்டார்

சிம்பாபே நாடு என்றாலே உடனே நினைவுக்கு வரும் நபர் , அன் நாட்டின் சர்வாதிகாரிnew-Gif றொபேட் முகாபே ஆகும். பல வருடங்களாக அவர் அன் நாட்டை ஆண்டு வருகிறார். சமீபத்தில் அவர் விமான நிலையத்தில் வைத்து படிக்கட்டு ஒன்றில் தடக்கி விழுந்துவிட்டார்.

அவ்வளவு தான் மாட்டர். அவர் விழும்போது சரியாகப் பார்க்து எந்த புண்ணியவான் கமரா மானோ தெரியவில்லை , அவர் கிளிக் செய்துவிட்டார். குறித்த புகைப்படம் உடனே இன்ரர் நெட்டில் வெளியாகிவிட்டது.

சும்மா இருப்பார்களா அவருக்கு எதிராக உள்ளவர்கள் ? உடனே அந்த புகைப்படத்தை வைத்தே தமது கலைத் திறமைகளை சிலர் வெளிப்படுத்திவிட்டார்கள். றொபேட் முகாபே விழுந்தது கூட பெரியவிடையம் அல்ல. ஆனால் அதற்கு பின் வெளியாகிய புகைப்படங்களை அவர் பார்த்து ரெம்பவே கடுப்பாகிவிட்டாராம்.

உடனே அந்த படங்களை இன்ரர் நெடில் இருந்து அகற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் இது என்ன சிம்பாபே நாடா ? அவர் சொன்னவுடனே எல்லாம் நடக்க ? எவரும் புகைப்படத்தை அகற்றவே இல்லை.

றோபேட் முகாபே பல படுகொலைகளைப் புரிந்த நபர். மகிந்த ராஜபக்ஷவை விட இவர் செய்த கொலைகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது இவருக்கும் கெட்டகாலம் போல உள்ளதே…

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*