இந்திய அணி உலகக்கிண்ணத்தை தக்க வைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:ஹர்பஜன்சிங்

இந்திய அணி உலகக்கிண்ணத்தை தக்க வைத்துக் கொள்ள சில வழிமுறைகளை new-Gifபின்பற்ற வேண்டும் என இந்திய  சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் பரபரப்பாக தயாராகி வருகின்றன.
இந்திய அணி நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கவுள்ளது. அதனால் அந்த அணிக்கு தொடர் நெருக்கடி இருக்கும்.
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்து இந்திய அணி பலம் வாய்ந்த அணிகளை சந்திக்கவுள்ளது.
இந்திய பந்துவீச்சாளர்களான உமேஷ்யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி உள்ளிட்டோர் முந்தைய
உலகக்கிண்ணப் போட்டியில் ஜாகீர்கான் செயல்பட்டது போல் சிறப்பாக செயல்பட்டால் தான் இந்திய அணியால் கிண்ணத்தை தக்க வைக்க முடியும்.
மேலும், இந்திய அணி 4 பிரதான பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி போன்ற ஒரு சகலதுறை வீரருடன் களம் காண வேண்டும்.
அதே சமயம் இந்திய அணியிடம் விராட் கோஹ்லி, டோனி, ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் அடங்கிய வலுவான துடுப்பாட்ட வரிசை உள்ளது.
இமாலய இலக்காக இருந்தாலும் ஒரே நாளில் விரட்டும் கோஹ்லியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.
களத்தடுப்பு கட்டுப்பாடு மற்றும் இரண்டு முனையிலும் புதிய பந்துகள் பயன்படுத்துதல் ஆகியவை
கடைப்பிடிக்கப்படுவதால், எல்லா போட்டிகளிலும் பிரதான 4 பந்து வீச்சாளர்களில் குறைந்தபட்சம் 3 பேராவது நன்றாக பந்து வீச வேண்டியது அவசியமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*