இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது: எஸ் இளங்கோவன்

இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ விரும்பினால், அவர்களுக்கு குடியுரிமைnew-Gif வழங்கப்பட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இலங்கை அகதிகள் விரும்பும் பட்சத்தில் மாத்திரமே, அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டுமெனவும் அக் கட்சியின் தமிழக தலைவர் எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

 இலங்கை அகதிகள் நீண்டகாலம் இந்தியாவில் தங்கியுள்ளதால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தயங்கக் கூடாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இலங்கையில் நிலைமை மாறிவருகின்ற போதிலும், நிலைமை முற்றாக மாறியதன் பின்னரே, அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். இதேவேளை, எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாதென பாரதீய ஜனதாக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

 இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதென கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் குறிப்பிட்டுள்ளார்.

 எனவே, இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*