மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றைய அனைவரும் பார்த்து மகிழ்வார்கள்”சிம்புவின் Twitter கருத்தால் சர்ச்சை

தல அஜித் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் உங்களுக்கு தெரியும்new-Gif என்னை அறிந்தால் என்பது. வழமையை விட அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம் இந்தப் படம். அத்தோடு, வெளியீட்டுத் திகதிகளும் பல மாற்றி மாற்றி இன்று தான் திரை கண்டது என்னை அறிந்தால். 

பலரும் புகழ்ந்து பிரம்மாண்டமாக படத்தை கொண்டாடிவரும் நிலையில், அடிப்படையில் தல இரசிகரான நம்ம சிம்புவும் முதல் படக்காட்சியாக படத்தை அனிருத்துடன் சென்று பார்த்துவிட்டு, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்தார்.

வழமையாகவே, சிம்பு சொல்ல வரும் விஷயங்கள் சிக்கலைக் கிளப்புவது தெரியும். இந்தமுறையும் அதே கதையாகி விட்டது இவரது ட்விட்டர் பகிர்வு.

”நிறைய நாட்களுக்கு அப்புறமாக ஒரு நல்ல தரமான படத்தை பார்த்ததான உணர்வு. தல அழகாகவும் அதிரடியாகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸாகவும் பெஸ்ட் கிளாசாகவும் படம் அமைந்திருக்கிறது என்னை அறிந்தால். இந்தப் படத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றைய அனைவரும் பார்த்து மகிழ்வார்கள்” இதுதான் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் கொறித்த பதிவு.
இது போதாதா நம்மாட்களுக்கு? 

எப்படி ஒரு படத்துக்காக மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இதனுள் இழுத்து, அவர்களின் மனம் நோகும்படி பேசலாம் சிம்பு என்று, ஒரு தரப்பு கொந்தளித்துள்ளது. உளநிலை சரியில்லாதவர்களை பாதிக்குமளவுக்கு எப்படி இவர்  பேச முடியும் என, சில இந்திய சமூக சேவைகள் அமைப்புக்கள் சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இதற்க்கு சிம்பு தரப்பிலிருந்து எந்தவிதமான பதில்களும் வரவில்லை. இன்னும் என்னென்ன சிக்கல்களை சிம்பு சந்திக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*