மீண்டும் நயந்தாரா-சிம்பு போட்டோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது

காதலர்களாக இருந்து பிரிந்த நயந்தாரா-சிம்பு தற்போது ஒன்றாக ‘இது நம்ம ஆளு’new-Gif படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நயந்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்து சில நாட்களிலேயே, நடிகை ஹன்சிகாவுடனான சிம்புவின் காதல் முறிந்தது.

இந்த காதல் முறிவுக்கு மீண்டும் நயந்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பது தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று சிம்பு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். தனது பிறந்தநாளில் நெருங்கிய, திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து, கொண்டாடுவது சிம்புவின் வழக்கம். அதுபோல், நேற்றும் தனது நெருங்கிய நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் பார்ட்டி வைத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சிம்பு.

இந்த பார்ட்டியில், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், சிம்புவின் முன்னாள் காதலியும், நடிகையுமான நயன்தாராவும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். பார்ட்டியில் சிம்பு, நயன்தாரா தோள்மீது கை போட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*