நான் எப்பவும் அழகாக தான் இருக்கிறேன்: காஜல் அகர்வால்

கதாநாயகிகள் சினிமாவில் மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கும் மேக்கப்new-Gif போட்டுக்கொண்டே வருகிறார்கள். இதற்காக பிரத்யோகமாக எப்போதும் தன்னுடனேயே இருக்கும்படி மேக்கப்மேனை வைத்துள்ளனர். மேக்கப்மேன் கதாநாயகிகள் செல்லும் இடமெல்லாம் கூடவே செல்கிறார். வீட்டில் ஒய்வில் இருக்கும் போது மட்டும் நடிகைகள் மேக்கப் போட்டுக் கொள்வது இல்லை.

மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது நடிகைகள் சாதாரண பெண்களாகவே தெரிகின்றனர். காஜல் அகர்வால் மேக்கப் போடாமலேயே நான் அழகாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகைகள் எப்போதும் மேக்கப்புடன் இருப்பது வழக்கம். ஆனால் என்னை சந்திக்கிற நிறைய பேர் நீங்கள் மேக்கப் போடாமலே அழகாக இருக்கிறீர்கள் என்கின்றனர். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இரவில் அடிக்கடி நான் ஷாப்பிங் போவது உண்டு. அப்போது ரசிகர்களால் எந்த தொல்லையும் எனக்கு ஏற்படுவது இல்லை. ஆனால் வேறு சில நடிகைகள் இதுபோன்று ஷாப்பிங் போய் பிரச்சினைகளை சந்தித்து உள்ளனர். படப்பிடிப்பில்கூட யார் மனதையும் புண்படுத்த மாட்டேன். சூட்டிங் முடிந்ததும் சக நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கருடன் சகஜாமாக பழகுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*