தைவான் நாட்டில் விமானம் வீழ்ந்தது(வீடியோ இணைப்பு)

தைவான் நாட்டில் 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம்new-Gif திடீரென ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஒன்று, சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் இன்று புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் 12 பேர் பலியானதாக தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தைவான் நாட்டு செய்தி ஏஜென்சி குறிப்பிடுகையில், ஆற்றில் விழுந்த விமானத்தில் சிக்கியுள்ள பயணிகளின் நிலை தெரியவில்லை.

ஆனால் அதில் 10 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் பணிகளை தொடர்கிறோம் என தெரிவித்துள்ளது.

600x150-benner1

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*