ஐதராபாத் நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சியில் சார்மி இடுப்பை பிடித்த வாலிபர்

தமிழில் ‘காதல் அழிவதில்லை’, ‘ஆஹா எத்தனை அழகு’, ‘காதல் கிசுகிசு’ உள்ளிட்ட படங்களில்new-Gif  நடித்தவர் சார்மி. இவர் தற்போது விக்ரமுடன் ‘பத்து என்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்து இருந்த விருந்து நிகழ்ச்சிக்கு சார்மி சென்று இருந்தார். அங்கு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்தார்.

அப்போது அந்த வாலிபர் திடீரென சார்மி இடுப்பை பிடித்தார். இதனால் சார்மி அதிர்ச்சியானார். வாலிபரை பிடித்து ஆவேசமாக தள்ளி விட்டார். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

இதுகுறித்து சார்மி கூறும்போது, அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் தள்ளி விட்டேன்.

அப்போது என் பாதுகாவலர்களும் அருகில் நின்றனர். அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள். அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருக்க விடமாட்டேன்’’ என்றார்600x150-benner11.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*