கோபன் நகரை கைப்பற்ற முடியாமைக்கு அமெரிக்க கூட்டுப்படையின் வான் தாக்குதலே முக்கிய காரணம்:ஐ.எஸ் தீவிரவாதிகள்

துருக்கி எல்லையில் உள்ள முக்கிய நகரமான கோபன் நகரை கைப்பற்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்new-Gif  கடந்த 4 மாதங்களாக முயன்று வருகிறார்கள். இன் நகரைப் பாதுகாக்க அந்த இடத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் ஆயுத சண்டையில் இறங்கவேண்டிய நிலை தோன்றியது. உள்ளூர் ராணுவம் ஒன்றை தாயார் செய்து, அதில் பெண்கள் மற்றும் சிறுவர்களை கூட இணைத்தார்கள் பொதுமக்கள்.

அவர்கள் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தவேளை அமெரிக்க கூட்டுப் படை பாரிய விமான தாக்குதலை தொடுத்தது. 9 முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா விமானங்கள் நடத்திய பாரிய தாக்குதல் மிகவும் துல்லியமானவை என்று கூறப்படுகிறது.

“லேசர்” குறிவைத்து தாக்கும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகள் முற்றாக தகர்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இறந்துள்ளார்கள். இதனால் பெரும் பலத்தை அவர்கள் இழந்துள்ளதாக பென்ரகன் தற்போது தெரிவித்துள்ளது. இன் நிலையில் கோபன் நகரின் எல்லையை விட்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் விலகில்ச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள். தாம் இந்த தாக்குதலில் தோல்வியடைந்துள்ளதாக அவ்வியக்கம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் இவ்வாறு ஒரு அறிக்கையை அவர்கள் வெளியிட்டது இல்லை. இன்று அவர்கள் வெளியிட்டுள்ளதே முக்கிய அறிகையாகும்.

அமெரிக்க கூட்டுப்படையின் வான் தாக்குதலே ,தமது பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் தாம் வேறுவிதமாக அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று அவர்கள் சமபதம் எடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*