கூட்டுப்படைகளின் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத வல்லுனர் கொல்லப்பட்டார்

ஈராக்கின் மொசூல் நகர் அருகே அமரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்new-Gif  நடத்தியதில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ரசாயன ஆயுத வல்லுனர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆணையகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ”ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி காலத்தில் ரசாயன ஆயுதம் தயாரிப்பதில் வல்லுனராக திகழ்ந்து பின் ஈராக் அல்கொய்தாவில் தன்னை இணைத்துக்கொண்ட அபு மாலிக் என்பவர் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கதில் இணைந்த பின்னர் கிளர்ச்சியாளர்களுக்கு ரசாயான ஆயுதங்களை அவர் த்யாரித்து கொடுத்தார். இவரின் மரணம் ஐ.எஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்களுக்கு எதிராக ரசாயன தாக்குதல்களை தொடுக்கும் திறனை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*