ISIS தீவிரவாதிகளால் பெரும் அதிர்சியில் அமெரிக்கா !!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மையங்களில் ஒன்றாக பென்டகன் இருந்து வருகிறது. உலகிலேயே new-Gif மிகவும் பாதுகாப்பு கூடிய கட்டடங்களில் இதுவும் ஒன்று. அதற்கு ரிவீட்டர் கணக்கும் உள்ளது. இதில் அவர்கள் தமது செய்திகளை வெளியிடுவது வழக்கம். அதன் கடவுச் செல்லை(password) எப்படியே அறிந்து அதனுள் புகுந்த ISIS தீவிரவாதிகள் பெரும் திகிலை ஏற்படுத்தியுள்ளார்கள். காரணம் என்னவென்றால், அதில் அமெரிக்காவின் உயர் ராணுவ அதிகாரிகளின் படங்களை அவர்கள் பிரசுரித்தது மட்டுமல்லாது, அவர்களின் முழுப் பெயர், பிறந்த தேதி, மற்றும் வீட்டு விலாசத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த இந்த அமெரிக்கா ராணுவ உயர் அதிகாரிகளின் பர்சனல் விடையம், அன் நாட்டில் உள்ள வேறு அதிகாரிகளால் கூட எடுக்க முடியாது. அவ்வளவு ரகசியமாக அவை பாதுகாக்கப்படுகிறது. இப்படி இருக்க தீவிரவாதிகள் கைகளில் அவை எப்படிச் சென்று ? என்று அமெரிக்க பெரும் குழப்பத்தில் உள்ளது. இதேவேளை குறித்த அதிகாரிகள் பலர் தாம் தங்கியிருந்த வீட்டை விட்டு அவசரமாக பிள்ளை குட்டிகளோடு வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார்கள். தீவிரவாதிகள் தனிப்பட்ட மிரட்டலை விடுக்காது, பென்ரகன் ரிவீட்டரில் இதனை எழுதியுள்ளமை பெரும் அதிர்சி தரும் விடையமாக உள்ளது.

சமூக வலையத்தளத்தில் எழுதினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இதனைப் பார்பார்கள் அல்லவா. மேலும் பல நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுக்கும் இவர்கள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. அத்தோடு நின்றுவிடாது. நீங்கள் யார் என்று எமக்கு தெரியும். விரைவில் உங்களை தேடி நாம் வருவோம் என்று எழுதியுள்ளார்கள்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*