பிரான்ஸ் பாரிஸில் நடைபெற்ற அமைதிக்காண பேரணி. (படங்கள்)

இன்று பிரான்ஸ் பாரிஸ்  றீப்பப்ளிக் என்ற இடத்தில் வரலாறு காணாத மக்கள் கூடி  இருக்கின்றனர். அதிபர் new-Gifபிரான்சுவா ஒலந்து கூறியது போலவே மக்கள் இன மத பேதமின்றி கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது.

பாரிஸில் வரலாறு காணத மக்கள் வெள்ளம்  அலையென திரண்டு  எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இன்றைய பேரணியில் நாற்பதுக்கும் அதிகமான நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஐரேப்பிய  நாட்டு ஐனாதிபதிகள் மற்றும் லண்டன்  பிரதமர் ஆபிரிக்க நாட்டு ஐனாதிபதிகள்   என்று  ஏராளமான பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

பாரிஸில் தொடருந்துகள் இலவசமாக விடப்பட்டன. மக்கள் வெள்ளம் அலை மோத  எல்லா நாட்டு கொடிகளுடன் பேரணியில் கலந்து கொண்டனர்.

இன்றைய பேரணியில் பத்துலட்சத்துக்கும 3.7 மில்லியன் ( MILLIONS) அதிகமானவர்கள்  பங்கேற்றனர்.

GMT நேரப்படி 10.30pm (22.30)pm  மக்கள் தொடந்தும் பேரணியில் கலந்து கொண்ட சிறப்பித்தனர்

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் காவல்துறையினரும் இன்றைய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கட்டிடங்களின் மேலே சிறப்பு பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணி செய்தார்கள்.

சார்லி எப்டோ என்கிற கேலிச்சித்திர சஞ்சிகையின் பணியாளர்கள் மீது புதன்கிழமை நடந்த தாக்குதலில் ஆரம்பித்த இந்த வன்முறைகள், வெள்ளிக்கிழமையன்று பாரிஸ் நகருக்கு வெளியே இருந்த அச்சகம் மற்றும் யூதர்களின் சிறப்பங்காடியில் நடந்த முற்றுகையை பிரஞ்சு பாதுகாப்புப் படையினர் முடிவுக்கு கொண்டு வந்ததுடன் முடிவடைந்தன.

DSCN6311 DSCN6313 DSCN6314 DSCN6316 DSCN6317 DSCN6319 DSCN6320 DSCN6322 DSCN6323 DSCN6324022 023

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*