பிரான்ஸ் வாழ் மக்களின் பேரணியில் ஒன்றிணையுங்கள்! பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை..

பிரான்சில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலைகளைக் கண்டிக்கும் பிரான்ஸ் வாழ் மக்களின் பேரணியில் ஒன்றிணையுங்கள்!

பிரான்சில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைக் கண்டித்து பிரான்சு வாழ் மக்களோடு ஓன்றிணைந்து நாமும் எமது வலிமையான கண்டனங்களைத் தெரிவிப்போம்!
‘சார்லி எப்டோ’ பத்திரிகைக் காரியாலயத்தின் மீது ஆயுததாரிகள் ஈவிரக்க முறையில் 08-01-2015, வியாழக்கிழமை நடத்திய தாக்குதலிலில,; பிரான்சின் புகழ்பெற்ற மிகச்சிறந்த ஊடககவியலாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டது, பிரான்சு வாழ் மக்களையும், உலகமக்களையும் பேரதிர்ச்சிக்கும ; பெரும ; துயருக்கும் உள்ளாக்கியுள்ளது.

மக்கள் உரிமைகளின் பாதுகாவலரான பத்திரிகையாளர் மீதான தாக்குதல் என்பது கருத்துச் சுதந்திரத்தையே சாகடிக்கச்; செய்யும் அச்சுறுத்தலாகவே நாம் கருதுகின்றோம். எனவே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமை ஆகும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மகத்தான மனிதவுரிமைகளை உலகுக்கு வழங்கி, மக்கள் உரிமைகளுக்கு முன்னோடியாக விளங்கும் பிரான்சு மண்ணில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் உலக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பயங்கரவாதத்தால் பறிக்கும் செயல்!

எனவே இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக,அனைத்து மக்களும் ஒற்றுமையாகக் கைகோர்த்து எமது வலிமையான கண்டனங்ளைத் தெரிவிப்போம்.

அரசியல் அகதியாக உயிர்பிழைக்க ஓடோடி வந்தபோது, நம்மை வரவேற்று வாழ் வழித்த பிரான்சு தேசத்தின் துயரில் பங்குகொள்வது. நன்றியுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

11-01-2015 ஞாயிற்று கிழமை மாலை 3 மணிக்கு ரிபுப்ளிகில் – Republique ( மெட்ரோ 5-8-9-11) பிரான்சு அரசின் அழைப்பின் பேரில், அணைத்து கட்சிகள்,அமைப்புகள் கலந்து கொள்ளும் இந்த பேரணியில் பிரான்சு வாழ் தமிழர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பேரணியில் ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்களும் பங்கு பற்றுகிறார்கள்.

ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
தொடர்புகளுக்கு: 06 52 72 58 67 – 06 60 67 59 71 – 06 59 99 46 08

பிரான்சில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலைகளைக் கண்டிக்கும் பிரான்ஸ் வாழ் மக்களின் பேரணியில் ஒன்றிணையுங்கள்!பிரான்சில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைக் கண்டித்து பிரான்சு வாழ் மக்களோடு ஓன்றிணைந்து நாமும் எமது வலிமையான கண்டனங்களைத் தெரிவிப்போம்!'சார்லி எப்டோ' பத்திரிகைக் காரியாலயத்தின் மீது ஆயுததாரிகள் ஈவிரக்க முறையில் 08-01-2015, வியாழக்கிழமை நடத்திய தாக்குதலிலில,; பிரான்சின் புகழ்பெற்ற மிகச்சிறந்த ஊடககவியலாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டது, பிரான்சு வாழ் மக்களையும், உலகமக்களையும் பேரதிர்ச்சிக்கும ; பெரும ; துயருக்கும் உள்ளாக்கியுள்ளது.மக்கள் உரிமைகளின் பாதுகாவலரான பத்திரிகையாளர் மீதான தாக்குதல் என்பது கருத்துச் சுதந்திரத்தையே சாகடிக்கச்; செய்யும் அச்சுறுத்தலாகவே நாம் கருதுகின்றோம். எனவே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமை ஆகும்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மகத்தான மனிதவுரிமைகளை உலகுக்கு வழங்கி, மக்கள் உரிமைகளுக்கு முன்னோடியாக விளங்கும் பிரான்சு மண்ணில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் உலக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பயங்கரவாதத்தால் பறிக்கும் செயல்!எனவே இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக,அனைத்து மக்களும் ஒற்றுமையாகக் கைகோர்த்து எமது வலிமையான கண்டனங்ளைத் தெரிவிப்போம்.அரசியல் அகதியாக உயிர்பிழைக்க ஓடோடி வந்தபோது, நம்மை வரவேற்று வாழ் வழித்த பிரான்சு தேசத்தின் துயரில் பங்குகொள்வது. நன்றியுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.11-01-2015 ஞாயிற்று கிழமை மாலை 3 மணிக்கு ரிபுப்ளிகில் – Republique ( மெட்ரோ 5-8-9-11) பிரான்சு அரசின் அழைப்பின் பேரில், அணைத்து கட்சிகள்,அமைப்புகள் கலந்து கொள்ளும் இந்த பேரணியில் பிரான்சு வாழ் தமிழர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.இந்த பேரணியில் ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்களும் பங்கு பற்றுகிறார்கள்.ஊடகப்பிரிவுபிரான்சு தமிழீழ மக்கள் பேரவைதொடர்புகளுக்கு: 06 52 72 58 67 – 06 60 67 59 71 – 06 59 99 46 08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*