மகிந்த சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினாா்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச new-Gif சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்துள்ளதை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெறுகிறார் மஹிந்த ராஜபக்ஷ

மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்தும் அவர் இன்று காலை வெளியேறியதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

 600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*