தனுஷ்டன் இரண்டு முன்னணி நாயகிகள் ஒரே படத்தில்

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் படத்தில் மாறி எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. ஏற்கெனவே இதே ‘விஐபி’ டீம் இணையும் புதிய படத்தில் எமி ஜாக்சன் நடிப்பதாக தனுஷ் தெரிவித்திருந்தார்.

தற்போது புதிதாக சமந்தாவும் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், அனிருத் மற்றும் சமந்தாவுடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “விஐபி’ டீம் சமந்தாவை வரவேற்கிறது. பிப்ரவரி 2015லிருந்து படப்பிடிப்பு ஆரம்பம்” என தெரிவித்துள்ளார். எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு முன்னணி நாயகிகள் ஒரே படத்தில் நடிக்கவிருப்பதால் படத்திற்கு இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஞ்சான், கத்தி படங்களுக்குப் பிறகு சமந்தாக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது “10 எண்ணுறதுக்குள்ளே” படத்தில் மட்டும் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தமிழ், தெலுங்கில் விட்ட இடத்தை அடுத்த ஆண்டு பிடிக்க தயாராகி வருகிறார் சமந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*