சுனாமிப் பேரவலத்தில் பலியான மக்களின் 10வது நினைவு வணக்க நிகழ்வு.

பிரான்ஸ் லாச்சப்பலில் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஏற்பாட்டில் சுனாமிப் பேரவலத்தில் பலியான மக்களின் 10வதுnew-Gif நினைவு வணக்க நிகழ்வு இன்று இடம்பெற்றது.

2004ம் ஆண்டு 26ந் திகதி தென்கிழக்கு ஆசியாவையே பேரவலத்திற்குள்ளாக்கிய சுனாமி பேரவலம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இக் கோரத் தாண்டவத்தில் பலஇலட்சக்கணக்கான மக்கள் பலியாகி பல  இலட்சக்கணக்கான மக்கள்  உறவுகளையும் சொத்து சுகத்தையும் இழந்து சொல்லணா துன்பத்தை சுமந்து வாழும் கொடுமை நிகழ்வின் 10ம் ஆண்டு நினைவும்

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய பல இலட்சக்கணக்கான மக்கள் உறவுகளையும் உடமைகளையும் இழந்த கொடுமையின் வடு சுமந்து இன்று நாம்

இவ் ஊளித்தாண்டவத்தில் பலியான மக்களின் நினைவுகளைச் சுமந்து 10ம் ஆண்டு நினைவு வணக்க  நிகழ்வு  பிரான்ஸ் லாச்சப்பலில் மாலை 16.30 மணியளவில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வின் தொடக்கத்தில் பொது ஈகைச் சுடரை ட்றான்சி வர்த்தக சங்கத்  தலைவரும்,உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத் தலைவரும்,மாநகர சபை உறுப்பினரும், உறுப்பினருமான திரு.அலன்  ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து சுனாமி பேரவலத்தில்  பலியானவர்களுக்கும்,பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் பலியானவர்களுக்கும்  2நிமிட அகவணக்கம்  செலுத்தப்பட்டது.

அதன் பின் மலர்  தூவி ஈகைச்  சுடரை நாடு கடந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுத்துறை அமைச்சர் திரு.மகிந்தன் அவர்களும்,இவ்றி சுசன் தமிழ் சங்கங்களின்  தலைவர் திரு. நடராஜா அவர்களும் மலர்  தூவி ஈகைச் சடரை ஏற்றி வைத்தனர்.அதைத் தொடர்ந்து மக்கள் மலர்அஞசலி செய்தனர்.

ட்றான்சி வர்த்தக சங்கத்  தலைவரும்,உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத் தலைவரும்,மாநகர சபை உறுப்பினரும், உறுப்பினருமான திரு.அலன்  ஆனந்தன்,நாடு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் திரு.மகிந்தன்அவர்களும் உரையாற்றினர்.

அதன்பின் நிகழ்வுகளாக நடனம்,கவிதை,தனிநாடகம்,அத்துடன் 2004ம் 26ந் திகதி தென்கிழக்கு ஆசியாவையே பேரவலத்திற்குள்ளாக்கிய சுனாமி பேரவலத்தை காட்சிப்படுத்தல் 2004ம் ஆண்டு ரி.ரி.என் தொலைக்காட்சிப் பிரிவினரால் ஒளிபரப்பப்பட்ட நாடகமும்  அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது.  DSCN6034DSCN6033 DSCN6035 DSCN6036 DSCN6037 DSCN6038 DSCN6039 DSCN6040 DSCN6041 DSCN6043 DSCN6044 DSCN6045 DSCN6048 DSCN6050 DSCN6051 DSCN6052 DSCN6056 DSCN6058 DSCN6063 DSCN6064 DSCN6066 DSCN6068 DSCN6071 DSCN6073 DSCN6076 DSCN6079 DSCN6083 DSCN6086 DSCN6087 DSCN6088 DSCN6097 DSCN6101 DSCN6122

DSCN6156

pp--full

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*