25-ந் தேதி விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம் ‘வெள்ளக்காரத்துரை’ ரிலீஸ்

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம் ‘வெள்ளக்காரத்துரை’. இப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

டி.இமான் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. வரும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்து பாராட்டியுள்ளனர்.

இப்படத்தை 100 படங்களுக்கும் மேல் விநியோகம் செய்துள்ள அன்புச்செழியனின் ‘கோபுரம் பிலிம்ஸ்’ பட நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*