பொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பள’ ரிலீஸ்

பொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பள’ ரிலீஸ். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷால் என்றாலும், லைன் புரட்யூசர் சுந்தர்சி. ஒரு தடவ சொல்லிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற வசனம் விஜய்க்கு சொந்தமாக இருந்தாலும், அதை செயல்படுத்துகிற விஷயத்தில் விஷாலுக்கு மார்க்.

பூஜை போடும்போதே ரிலீஸ் தேதியை அறிவிக்கிற வழக்கம் ஏ.வி.எம் நிறுவனத்திற்கு பிறகு விஷாலுக்குதான் வாய்த்திருக்கிறது. தனது முந்தைய படங்கள் இரண்டை அப்படிதான் வெளியிட்டார் அவர். இந்த முறை ஆம்பளை பொங்கலுக்கு ரிலீஸ் என்று படப்பிடிப்பு துவங்கும்போதே அறிவித்துவிட்டுதான் துவங்கினார். இப்போது அங்குதான் சிக்கலே. பொங்கலுக்கு ஷங்கரின் ஐ மற்றும் அஜீத்தின் என்னை அறிந்தால் இரண்டும் வருகிறது. ஆம்பள வந்தால், கலெக்ஷன் பாதிக்கும் என்பது விஷாலை சுற்றியுள்ளவர்களின் அட்வைஸ்.

திரையுலகத்தில் பெருத்த அனுபவசாலியான சுந்தர்சியும் அதையே நினைக்கிறாராம். ஆனால் படத்தை திட்டமிட்டபடி கொண்டு வந்துவிடலாமே என்கிறாராம் விஷால். பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. நடுவில் அரண்மனை கதை நான் தயாரித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையை அப்படியே உல்டா பண்ணியது என்று கூறி போலீஸ் வரைக்கும் சென்றுவிட்டார் தயாரிப்பாளர் முத்துராமன். ஆம்பள வெளியீட்டை அநேகமாக முடக்குகிற சக்தி முத்துராமனுக்குதான் இருக்கும் என்கிறார்கள்.

எப்படியோ…? சுந்தர்சி நினைத்தது போல படம் தள்ளிப் போனால் அவருக்கும் நிம்மதி. விஷாலுக்கும் நிம்மதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*