நாணயத்தை போட்டு கரன்ஸியை அறுவடை செய்யும் கோகுல்

மானாட மயிலாட புகழ் கோகுல் முழு வேகத்தில் பெரிய திரையை ஆக்ரமிக்க கிளம்பிவிட்டார். அதன் விளைவாக நடக்கும் அநியாயங்கள்தான் ஐயகோ! எப்படி? சமீபத்தில் அவர் நடித்த ஆ என்ற படத்தில் இப்போதைய டாப் லெவல் நடிகர் பாபி சிம்ஹாவும் நடித்திருக்கிறார்.

ஜிகிர்தண்டா வெற்றிக்கு பிறகு சிம்ஹாவின் பெயரை படித்தாலோ, படத்தை பார்த்தாலோ அந்த பக்கம் பார்வையை திருப்புகிறது ரசிகனின் மனசு.

ஆனால் இது புரியாமல் சிம்ஹாவின் படத்தை எதிலும் பயன்படுத்த வேண்டாம். என் படத்தை மட்டும் போடுங்கள் என்று கூறிவிட்டாராம் கோகுல். படத்தின் தயாரிப்பாளரை அறிமுகம் செய்தவர் என்ற முறையிலும், அடுத்த படத்திற்கும் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்தார் என்ற முறையிலும் கோகுல் படத்தையே முன்னிலை படுத்தி வந்தார்கள் அப்படத்தின் இரட்டை இயக்குனர்களான ஹரி ஹரீஷ் இருவரும். ஆ ஒரு வழியாக திரையில் ஓடி மீண்டும் ஆபிசுக்கு வந்தாகிவிட்டது.

நெக்ஸ்ட்? ஜிம்போ என்ற படத்தை துவங்கிவிட்டது இதே டீம். இது 3டி படம். ஜப்பானில் 70 சதவீத படப்பிடிப்பு இருக்கிறதாம். எல்லாமே கோகுலின் ஏற்பாடு. நாணயத்தை போட்டு கரன்ஸியை அறுவடை செய்யும் இந்த தந்திரம் பலிக்கட்டும் கோகுல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*