நாடு கடந்த தமிழீழத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகளுடன் பொது எதிரணி கூட்டமைப்பு சந்திப்பு?

நாடு கடந்த தமிழீழத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிங்கப்பூரில் வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்தானந்த அளுத்கமமே உள்ளிட்டவர்களே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்னளனர்.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த நவம்பர் மாத காலப்பகுதிக்குள் மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, பாடலி சம்பிக்க ரணவக்க, திகாம்பரம், ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா, மங்கள சமரவீர ஆகியோர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர். இவர்கள் அங்கு சென்ற காலப்பகுதிக்குள்ளேயே நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களாக இருக்கும் 13 பேரில் 9 பேரும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

எனவே அங்கே என்ன நடந்திருக்கும்? சகல தகவல்களையும் திரட்டி வருகிறோம். எங்கே தங்கினார்கள்? யாரை சந்தித்தார்கள்? என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது? போன்ற தகவல்களை திரட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் அனைத்து தரவுகளையும் திரட்டி நாட்டு மக்களுக்கும் ஊடகங்க ளுக்கும் பகிரங்கப்படுத்துவோம். இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து டொலர்களுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்” என்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*