14 வயது லண்டன் தமிழ் மாணவன் பலி

மிகவும் திறமையான, நன்றாகப் படிக்க கூடிய மற்றும் அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கிய தமிழ் மாணவன் திடீர் மரணமாகியுள்ளார். லண்டன் ஹரோவில் உள்ள வைட்மோர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்று வந்த 14 வயது மாணவனான, சுஜிந்த் சற்றும் எதிர்பாராத வகையில் உயிரிழந்துள்ளார்.

பள்ளிக்கூடத்தில் கால்பந்தாட்ட பயிற்சி எடுக்கும்போது சுஜிந்த் நெஞ்சில் அடிபட்டுள்ளது. சிறிய வலியே முதலில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். “நோத்-விக் ” பார்க் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுஜிந்த் திடீரென இறந்துவிட்டார். அவரது மார்பு பக்கமாக அடி விழுந்ததில், உள்ளேயே ரத்தப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்தம் பெருகி அவர் இறந்துவிட்டதாக தற்போது மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மிகவும் திறமையான மாணவன் ஒருவனுக்கு இவ்வாறு நடந்துள்ளது, பெரும் கவலை தரும் விடையமாக உள்ளதாக ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளார்கள். சக மாணவர்கள் தெரிவிக்கையில் சுஜிந்த் ஒரு நல்ல நண்பர், இரக்க குணம் படைத்தவர், அனைவரோடும் நன்றாகப் பழகும் குணம்கொண்டவர், அவரை தாம் இழந்துவிட்டோம் என்றும் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

பள்ளியில் இதுபோன்ற பயிற்சிகள் நடைபெறும்போது , ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது. இல்லையென்றால் அதற்கு ஏற்ற உடைகளை போடுமாறு மாணவர்களை ஆசிரியர்கள் பணிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் இடம்பெறாது இருக்க உங்கள் பிள்ளைகளையும் பெற்றோர்கள் அறிவூட்டுவது நல்லது.

14 வயதேயான சுஜிந்தனை இழந்து தவிக்கும் அவரது, பெற்றோரான ஜெயகுமார் குடும்பத்தாருக்கு  யாழ்.எப்.எம்.றேடியோ இணையம் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு சிறுவனின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்தனை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*