2015 இல் புதுப்பொலிவு பெறும் துரையப்பா விளையாட்டரங்கு

இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கின்  new-Gif புனர்நிர்மாண பணிகளுக்கு 145 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக  துணைத்தூதரகத்தின் பிரதித்தூதுவர் தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்.துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகிய புனரமைப்பு பணிகளை நேரில்சென்று பார்வையிட்டதுடன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக்குறிப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் கடந்த மாதம் 6 திகதி அன்று  புனர்நிர்மான பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த புனரமைப்பு பணியில் இரண்டு பார்வையாளர் அரங்குகளும், உள்ளங்குகின்றன.
அத்துடன் மைதானத்தில் புதிதாக 400 மீட்டர் நீளம் உடைய தடகள  பாதையும் சர்வதேச தரத்தில் உருவாக்க படவுள்ளது.
அத்தோடு கழிப்பிட அறைகளும், கழிவு  நீர், மழை நீர் கால்வாய்களும்,தானியங்கி  நீர் தெளிப்பான்கள் ஆகியனவும் அமைக்கப்படவுள்ளன.
இவ்வாறான புனரமைப்புக்கள் 2015 ஆம் ஆண்டு மே மாதமளவில் நிறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஓகஸ்ட்  மாதம்  இந்த புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*