அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற வாலிபர் புதிதாக வித்தியாசமாக ஏதாவது வீடியோ எடுத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற புதுமையான நோக்கத்துடன் அனகோண்டாவின் வயிற்றுக்குள் உயிரோடு சென்று அதற்குள் சுமார் ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் வெளியே வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று யூடியூபில் 30 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
அமேசான் காட்டை ஒருசிலர் சுயநலத்திற்காக அழித்து வருவதையும், விலங்குகளை வேட்டையாடி கொடுமைப்படுத்துவதையும் எதிர்க்கும் ஈட்டன் லைவ் என்ற நிகழ்ச்சிக்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் இந்த வீடியோ டிஸ்கவரி சேனலில் முழுவதுமாக ஒளிபரப்பப்பட உள்ளது.
சுமார் இரண்டு மாத காலம் அமேசான் காட்டில் தேடியலைந்து கடைசியாக ஒரு பெண் அனகோண்டாவை பிடித்து, அதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான உடையணிந்து அனகொண்டாவில் வாய் வழியாக பால் ரொசோலி உள்லே சென்றார். அனகோண்டாவின் உடலுக்குள் சென்றாலும் வெளியில் உள்ள தனகு குழுவினர்களுடன் அவர் நவீன கருவிகள் மூலம் தொடர்பில் இருந்தார். சுமார் ஒருமணி நேரம் கழித்து அவர் அனகோண்டாவின் உடலில் இருந்து வெளியே வந்தார்.