மீண்டும் பிரச்சனையில் வடிவேலு?

வடிவேலு, தனது மகன் சுப்ரமணியனின் திருமணத்தை உறவினர்களை மட்டும் அழைத்து சிம்பிளாகnew-Gif  நடத்தி முடித்திருக்கிறார்.

நடிகர் வடிவேலு, தன் மனைவி வழி சொந்தத்தில் தனது மகன் சுப்பிரமணியனுக்கு பெண் பேசி முடித்திருந்தார்.

பெண் வீட்டில் வரதட்சணை எதையும் வாங்காமல், மணமகள் புவனேஸ்வரிக்கு அனைத்து செலவுகளையும் செய்து, திருமண ஏற்பாட்டுகளையும் வடிவேலுவே பார்த்துக்கொண்டார்.

இந்நிலையில், வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று காலை நடந்தது. அவரின் சொந்த ஊரான ஐரா நல்லூர் ஊரைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். வடிவேலு தாயார் சரோஜினி அம்மாள், இரண்டு அக்காள்கள், மூன்று தம்பிகள், சொந்த ஊரான ஐராவதநல்லூர் மக்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தார். மேலும், இந்த விழாவில் தெனாலிராமன் பட இயக்குனர் யுவராஜும், அமீரின் உறவினரும், இயக்குனருமான ஆதம்பாவாவும் குடும்பத்துடன் வந்து இருந்தனர்.

இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிரைவேட் செக்யூரிட்டி மூலமாக எல்லோரும் விசாரிக்கப்பட்ட பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல், மணமக்களுக்கு வைத்த வாழ்த்து பேனரிலும் தனது பெயரை தவிர்த்திருக்கிறார் வடிவேலு. மேலும், மணமக்களுக்கு அருகில்கூட செல்லாமல், ஒரு அறைக்குள்ளேயே இருந்து கொண்டாராம் வடிவேலு.

நமக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று தான் வடிவேலு சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டு ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த இவரது மகன் திருமணத்தில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது.

இந்நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருமண மண்டபத்திற்குள் திடீரென புகுந்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மணமகள் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

அவர் மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்துவதாக போலிஸார் தரப்பில் கூறப்பட்டது. பின் புவனேஸ்வரிக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்கள் ஆகிவிட்டன என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் நிம்மதியாக இருக்ககூடாது என்று தான் சிலர் இப்படி செய்து வருகின்றனர் என்று வடிவேலு தரப்பில் கூறப்படுகிறது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*